Perambalur: Gram Sabha meeting in the district on October 2; Collector announces!

பெரமபலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டங்களின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இக்கிராம சபைக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497