Perambalur: Special camp at ration shop for fingerprint registration!

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,95,946 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு கைரேகை, கண் கருவிழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணையின்படி, அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களும், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகையினை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பணியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் எதிர்வரும் 26.09.2026 (சனிக்கிழமை) அன்று கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைரேகையினை பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் அப்துல் ராசிக தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!