Perambalur: Grand ‘Niagara’ and ‘Surreal’ Waterfalls Exhibition Inaugurated! The Public Enthusiastically Views the Displays and Enjoys Bathing in the Falls!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் சாலையில் பாலக்கரை அருகே சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் டி.ஜே பொழுதுபோக்கு நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட நீர்வீழ்ச்சி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சீனா, துபாய் போன்ற நாடுகளில் மக்கள் கண்டுகளித்த நீர்வீழ்ச்சிகள் நயகரா, சர்ரியல் போன்றவை செயற்கை முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

நயாகரா மற்றும் சர்ரியல் நீர்வீழ்ச்சிகள் பார்ப்போரை கண்கவரும் விதத்தில் அமைக்கப்பபட்டுள்ளது. தண்ணீர் விழுந்து ஆர்பாரிக்கும் சத்தம் மனதிற்கு ரிதமாகவும் இதமாகவும் உள்ளது. போட்டோ எடுத்துக் கொள்ளும் வகையிலும், அருவியில் இருந்து விழும் நீரை ரசிக்கும் வகையில் முன்னே சென்று பார்த்து வரும் வகையில் பாலம் அமைத்துள்ளனர். மற்றொரு நீர்வீழ்ச்சியான சர்ரியல் அருவியில் விழும் தண்ணீரில் கைதொட்டு ரசிப்பதுடன் குளிக்கவும் முடியும் என்பதால், இதில் அதிகளவில் பெண்கள், குழந்தைகள் குளித்து குதூகலத்துடன் ஆனந்தம் அடைகின்றனர். கோடைக்கு இதமாக அருவியில் இருந்து கொட்டும் தண்ணீரில் முகில் துகள்கள் ஜில்லென காற்றில் பரவி பார்வையாளர்களை பரவசத்தை ஏற்படுத்துகிறது. மழைக் காலத்தில் அருவிகளை சென்று ரசிக்க முடியாமல் தவர விட்டவர்களுக்கு பெரம்பலூரில் இயற்கைக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அருவிகள் பெண்கள், குழந்தைகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு! அருவிகள் இரவு நேரத்தில் ரசனையை அதிகப்படுத்தும் வகையில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருவிகளின் அருகே நடக்கும் பொருட்காட்சியில் பொழுதுபோக்கும் விதாமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் மகிழும் விதமாகவும், ராட்டினம், பேய் வீடு, மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பள்ளி – கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை நாட்களாக உள்ளதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை டிஜே அம்யூஸ்மெண்ட்ஸ் மேலாண் இயக்குனர் தினேஷ், மேலாளர்கள் உதயகுமார், காதர், ரவி, மோகன்தாஸ் ஆகியோர் செய்து உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!