Perambalur: Gusty Winds Accompany Summer Rains; Mango, Banana, and Maize Crops Severely Damaged! Farmers Urge Election Commission to Take Action to Provide Compensation.

பெரம்பலூர் அருகே நேற்று மாலை பெய்த மழையின் போது வீசிய பலத்த சூறைக் காற்றினால் ஆயிரகணக்கான குலை தள்ளிய வாழை மரங்கள், மா மற்றும் மக்காச் சோளப்பயிர்கள், சாய்ந்து விழுந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மா மரங்களில் காய்த்திருந பிஞ்சுகள் அனைத்தும் உதிர்ந்து தரையில் விழுந்ததால் மா விவசாயிகள் தவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக கோடை மழை பெய்தது. பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களில் உள்ள எசனை, அன்னமங்கலம் அரசலூர், விசுவகுடி , பூஞ்சோலை மூலக்காடு தொண்டமாந்துறை மலையாளப்பட்டி அ.மேட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை பெய்த மழையின் போது வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் ஆயிரகணக்கான வாழை மரங்கள் பூவும் பிஞ்சுமாக முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையிலுள்ளனர்

இதேபோல், அதே பகுதிகளில் நூற்று கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மாமரங்களிலிருந்த மாம்பிஞ்சுகள் மற்றும் காய்கள் அனைத்தும் சிதறி தரையில் கொட்டியது. ஏற்கனவே கடுமையான வெப்பத்தால் பூக்கள் கருகி மிக குறைந்த அளவிலேயே காய் பிடித்திருந்த நிலையில் தற்போது சுழற்றி வீசிய சூறாவளி காற்றால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் வேப்பந்தட்டை பகுதியில் கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந் மக்காசோளபயிர்களும் கதிர் வாங்கிய நிலையில் காற்றில் சாய்ந்துள்ளதால் கதிர்கள் காய் பிடிக்காமல் பாழாகி இழப்பு ஏற்படும் என்கின்றனர். விவசாயிகள் எனவே அரசு வருவாய் துறையினரை கொண்டு பாதிப்புகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!