Perambalur: Hanuman Jayanti; Special anointing for Anjaneyar!
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி திருக்கோவிலில் சீதா, ராமர், ஆஞ்சநேயர், உடனுறை ராமர் சன்னதியில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் ராஜபுரம் முன்பு கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மங்கள வாத்தியம் முழங்க மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சியர் செய்து வைத்தார். முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், கோவிந்தராஜ், ப.மகேஸ்வரன், ராஜமாணிக்கம் உள்பட திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டனர்