Perambalur: Higher Education Guidance Center for Government School Students; Sub-Collector Inaugurates!
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்படுகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவ படிப்புகள், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் தொடர்பான ஆலோசனைகள் பெறுவதாவற்கும், பெற்றோர் இல்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில நிதி உதவி கேட்பது தொடர்பாக நேரிலோ அல்லது தொலைப்பேசியிலயோ கேட்பதற்காக உயர்கல்வி வழிகாட்டல் மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி 88072 62766 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று பயன் பெறலாம். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.