Perambalur: Illicit sale of chilled beer and liquor using a Paytm machine; Election Flying Squad officials seized the items following a complaint.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் பி.சி இடுகாட்டில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்ததை, அப்பகுதி மக்கள் தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை 7.40 மணியளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செ.காமராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4,530 மதிப்பிலான கூலிங் பீர் பாட்டில்கள் மற்றும் 26 மது பாட்டில்கள், பேடிஎம் மிசினுடன் கைப்பற்றினர்.

இதே போல, அரணாரை பகுதியில் இன்று காலை 8.20 மணியளவில் நில அளவைத்துறை ஆய்வாளர் குருமூர்த்தி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,
நாஜிம் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.56,000 மதிப்பிலான 14 மிக்சிகள் கைப்ற்றி ஒப்படைத்தனர்.

குரும்பலூர் பாளையம் பகுதிகளில் மதுபானக்கடையின் அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாளையம் மதுபானக்கடையின் அருகில் ரூ.3,200 (Mens Club Brandy) வகை மது பாட்டில்கள் SST Team – 04 நிலையான கண்காணிப்பு குழுவின் தலைவர், கூட்டுறவு சார்பதிவாளர் கவுசிகன் தலைமையிலான குழுவினர் கைப்பற்றினர். ரூ.7,730 மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் ரூ.56,000 மதிப்புள்ள மிக்ஸிகளை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூர் காவல் துறையினர் அரசு மதுபானக் கடை மூடியிருக்கும் போது, சந்து கடையில் காலை நேரத்தில் மது விற்பதை ஊக்குவிக்க கூடாது எனவும், தேர்தல் காலத்தில் சந்தேகபடும்படியான சம்பவங்கள் நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!