Perambalur: Income Tax Department officials raid private mines office!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஓலைப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் உள்ள மாருதி மைன்ஸ் அலுவலகம் உள்ளது. இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் சிமெண்ட் ஆலைக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் தினமும் எத்தனை லாரிகள் செல்கின்றன என்கிற கணக்கு மட்டும் இங்கு உள்ளது. மேலும், இங்கு ராதாகிருஷ்ணன் என்கிற வாட்ச்மேன் மட்டும்தான் பணியில் உள்ளார்.

இன்று நடந்த திடீர் வருமான வரி சோதனையில் இந்த கணக்குப் புத்தகங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். மேலும், அரியலூரில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மாருதி சிமென்ட் தொழிற்சாலை” என்று ஒன்று கூட இல்லை, ஆனால், திருச்சி பகுதியில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட இரண்டு நிறுவனங்கள் உள்ளன, மாருதி சூப்பர்டெக் சிமென்ட் பிரைவேட் லிமிடெட் , கரியமாணிக்கம் சாலையில், சமயபுரம் புதூர், ஸ்புதூர், திருச்சி-621005இல் அமைந்துள்ளது . மற்றொன்று மாருதி சிமெண்ட், தத்தமங்கலம், ஈச்சம்பட்டி-621112, திருச்சியில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!