Perambalur: Land survey applications can be made online; Collector informs!

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இவ்வசதியினை கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது, இனிவரும் காலங்களில் கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை அனைத்து பொது சேவைமையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக மட்டுமே மனு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவைமையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை / வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!