Perambalur: Local elections were 202 nominations today
பெரம்பலூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு பதவியிடங்களுக்குப் போட்டியிட இன்று 202 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 693 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று (29.9.2016) ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 26 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 170 பேரும், நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு 3 நபரும் என மொத்தம் 202 நபர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 693 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.