Perambalur: Mahilir Vidiyal Payanam; Women thank the Chief Minister; 3.46 crore people traveled in 4 years!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கியத் திட்டங்களுள் ஒன்று மகளிர் விடியல் பயணம் திட்டம். திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார ரீதியாக மகளிர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் என எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. அவற்றுள் குறிப்பிடத்தக்க திட்டம் மகளிர் விடியல் பயணம் திட்டம். பெண்களின் மிகுந்த வரவேற்பை மட்டுமல்லாது, இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் திருப்பிப்பார்க்க வைத்த திட்டம்.

விடியல் பயணம் திட்டம் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டாலும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுடன் வரும் உதவியாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கும் இலவச பேருந்து பயணத்தை இத்திட்டம் உறுதி செய்கின்றது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை பெரம்பலூர் மாவட்டத்தில் 3,46,29,219 மகளிர் விடியல் பணம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். மேலும், 3,46,528 மாற்றுத்திறனாளிகளும், 14,010 மாற்றுத்திறனாளி உதவியாளர்களும், 17,811 திருநங்கைகளும் என மொத்தம் 3,50,27,566 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

விடியல் பயணம் திட்டத்தில் பயனடைந்த மகளிர் ஒவ்வொருவரும் இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சின்னவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி தெரிவித்தாவது: என்னைப் போன்ற ஏழை எளிய விட்டுப் பெண்கள் மாத முழுவதும் இலவசமாக பயணம் செய்யும் வகையில் முதலமைச்சர் ஐயா அவர்களால் கொண்டுவரப்பட்டுள்ள விடியில் பயணம் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் பேருந்து பயணத்திற்காக செலவிடப்படும் தொகை மிச்சப்படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நான் பயன்பெற்று வருகிறேன். இதுபோன்ற திட்டங்கள் எங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி இது போன்ற திட்டங்களை தொடர்ந்து வழங்கி வரும் நாள் முழுதும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைத்து மகளிர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

கடந்த 4 ஆண்டுகளில் போக்குவரத்து துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 16 நகர்ப்புற பேருந்துகள், 21 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 37 புதிய பேருந்துகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 12 பேருந்துகள் வழித்தடம் நீட்டிக்ப்பட்டுள்ளது. 29 பேருந்துகள் கூடுதல் நடைகளாக இயக்கப்படுகின்றது. குன்னத்தில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!