Perambalur: Membership enrollment camp for the Welfare Board for Widows and Destitute Women; Collector announces.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கட்டுப்பாட்டில் கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலவாரியத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டத்தில் உள்ள 4 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், போட்டோ, கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் 15.09.2026 அன்று பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 16.09.2026 அன்று ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 17.09.2026 அன்று வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 18.09.2026 அன்று வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!