Perambalur: New members elected for the Violence Prevention Awareness and Monitoring Committee!

வன்கொடுமை தடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு நியமித்து காலாண்டிற்கு ஒருமுறை குழு கூட்டத்தை நடத்திடவும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. பழங்குடியினர் நலம் வன்கொடுமைத் தடுப்பு விதிகள் 1995, பிரிவு 17-ன்படி 2021 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவிற்கு திருந்திய உறுப்பினர்கள் திருத்தி அமைக்கப்பபட்டுள்ளதாவது:

விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவராக கலெக்டரும், செயல் உறுப்பினராக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், உறுப்பினர்காளக சிதம்பரம் தொகுதி எம்.பி தொல்.திருமாவளவன், பெரம்பலூர் எம்.எல்.ஏ கே.சிவக்குமார், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆகியோரும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த தகுதியுடைய அலுவலர்களாக, ஆலத்தூர் வட்டம் நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நத்தக்காடு கிராமம், தலைமையாசிரியர் து. ஷீலா, பெரம்பலூர் ஆலம்பாடி மெயின் ரோடு, அன்பு நகரை சேர்ந்த அரியலூர் மாவட்டம். கோவிந்தராஜபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சி.வையாபுரி, குரும்பலூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் ம.சுரேஷ்குமார், ஆகியோரும்,

அலுவலல் சாரா உறுப்பினர்களாக குரும்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பேராசிரியர் வைரமணி, வழக்கறிஞர்கள் தி. கீரனூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் மானெக்ஷா, சங்கர், நக்கசேலத்தை சேர்த்த மூத்த வழக்கறிஞர் அய்யம்பெருமாள் ஆகியோரும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அல்லாத தொண்டு நிறுவனங்கனைச் சார்ந்த உறுப்பினர்களாக நதிகள் அறக்கட்டளை இயக்குனர் ராமச்சந்திரன், தாய்வீடு மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் ரேவதி, வளர்பிறை அறக்கட்டளை தலைவர் வனஜா கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!