Perambalur: Membership recruitment camp for Widows and Destitute Women’s Welfare Board; Collector’s information!

Collector Grace
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நலவாரியத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், போட்டோ, கைபேசி எண் கொண்டு வர வேண்டும். இந்த நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வருகிற 10.06.2025 அன்று பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11.06.2025 அன்று ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 12.06.2025 அன்று வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 13.06.2025 அன்று வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.