Perambalur: Minister Sivasankar, MLA Prabhakaran launched the breakfast program in government-aided schools!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரகப் பகுதிகளில் அரசு உதவிபெறும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவெண்மணி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிதம்பரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரலையில் பார்வையிட்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 263 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் 11,948 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்த தொடங்குவதற்கு முன் 93.08 சதவீதமாக இருந்த மாணவர்கள் வருகை இத்திட்டம் செயல்படுத்த தொடங்கிய பிறகு 96.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்களில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 45 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 3,291 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், கிராமப் பகுதிகளில் வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.5.46 லட்சம் மதிப்பில் வீடுகளை பழுதுபார்ப்பதற்கான ஆணைகளையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ்14 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிதம்பரம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, காலணிகள், கால்உறைகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
முன்னதாக கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சரும், கலெக்டரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துலட்சுமி மதியழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்( பொறுப்பு ) அண்ணாதுரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் 36. எறையூரில் உள்ள நேரு பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.