perambalur-twadகுடிநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி : பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

குடிநீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் நகராட்சி அலுவலகத்தில் இன்று (28.06.16) கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

குடிநீர் தரத்தினை அறிய அனைத்து ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் ஆலத்தூர் பெரம்பலூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் சுமார் 3ஆயிரத்து 400 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீர் தரசோதனை (காரதன்மை, அமிலதன்மை, கடினதன்மை, நைட்ரைட்டு, நைட்ரேட்டு, ஃபுளுரைடு, குளோரின், கால்சியம்) செய்யப்பட்டு குடிநீர் தரங்கள் உரிய பதிவேடுகளில் பதிவுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களின் தரத்தினை அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மழை நீரை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று (28.06.16) நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மழை நீர் சேகரிப்பு பிரச்சார விழிப்புணர்வு பேரணியில் எவ்வாறு மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்பபடுத்துவது, இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிடும் வாசகங்கள் அடங்கிய விளம்பர துண்டு பிரசுரங்களை மாணவ, மணவிகள் வழங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கனகராஜ், உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!