PERAMBALUR near death, during which Prepared hot water the young girl on fire, including an infant, an elderly man who tried to rescue the injured to hospital
பெரம்பலூர் அருகே சுடுதண்ணீர் வைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு: கைக்குழந்தை உட்பட காப்பாற்ற முயன்ற முதியவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சுடுதண்ணீர் வைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கைக்குழந்தை உட்பட காப்பாற்ற முயன்ற மாமனார் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நாட்டார்மங்களம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடு, காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கரன்(26), கீர்த்தீகா(21), இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, ரித்தீஷ் என்ற ஒன்றரை வயது கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் கீர்த்திகா அடுப்பில் சுடு தண்ணீர் போட்டு கொண்டிருந்த போது, அவர் கட்டியிருந்த புடவையின் ஒரு பகுதியில் எதிர்பாரத விதமாக தீ பிடித்துள்ளது. இதனால் பதட்டமடைந்து கீர்த்திகா எழுந்த போது அருகிலிருந்த மண்ணெண்ணை கேன் சாய்ந்து கீர்த்திகா மீது தீ மேலும் பரவி அலறியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு விவசாய பணியில் ஈடபட்டிருந்த அவரது மாமனார் சுப்ரமணி(56), ஓடி வந்து தீயைணைத்து கீர்த்திகா மற்றும் அவரது குழந்தையை காப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகா 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரது குழந்தை ரித்தீஷ் 18 சதவீத தீக்காயமும், காப்பாற்ற முயன்ற போது சுப்ரமணிக்கு 20 சதவீத தீக்காயமும் ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.