Perambalur near the student’s parents denounced the death who swallowed poison!
பெரம்பலூர் அருகே பெற்றோர்கள் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவி சாவு!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த விஷம் குடித்த மாணவி சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள்ரஷ்யா (வயது 17), அரியலூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடிந்த இவருக்கு அரசு வழங்கிய மடிக்கனிணியை அவருடன் பயின்ற பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியான தமிழ்செல்வி( 17) என்பவரிடம் சில சாஃப்ட்வேர்கள் பொருத்துவதற்காக செய்வதற்காக கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வாங்க வரவில்லை என ரஷ்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்த ராஷ்யா கடந்த 28ந்தேதி வீட்டில் தனியாக இருந்த போது களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்தார்.
இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ரஷ்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை 9.30 மணியளவில் தொடர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
இதுகுறித்து, ரஷ்யாவின் தந்தை ராமசாமி (47) அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ரஷ்யா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயில இருந்தார் என அவரது உறவினர் கூறி கதறி அழுதனர்.