Perambalur: Nehru Yuvakendra’s District Youth Festival inaugurated by MLA Prabhakaran!
இந்திய அரசு, பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து “மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா-2024” என்ற நிகழ்ச்சியானது தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரியில் நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து விழா பேருரையாற்றினார்.
பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் குருதி வங்கி மருத்துவர் வி. சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் எஸ். கீர்த்தனா நோக்க உரையுடன் நிகழ்த்தினார். வி.ஆர்.எம் அகாடமி நிறுவனர் அக்ரி. மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
“புதுமை தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சி குழு போட்டியாகவும், தனிநபர் போட்டியாவும், “ஒரு பொறுப்புள்ள குடி மகனின் கடமைகள்” என்ற மைய கருத்தை வலியுறுத்தி இளையோர்களுக்கான பேச்சு போட்டியும், “காலணித்துவ மனப்பான்மையின் எந்த தடையத்தையும் அகற்றுதல்” என்ற தலைப்பில் இளம் ஓவியர்களுக்கான வரைதல் போட்டியும், “பாரம்பரிய நடனம்” என்ற தலைப்பில் கிராம நடன போட்டியும், “வளர்ந்த இந்தியாவை தீர்மானித்தல்” என்ற தலைப்பில் இளம் எழுத்தாளர்களுக்கான கவிதை போட்டியும், புகைப்படம் எடுத்தல் (செல்போனில்) பல்வேறு விதமான ஏழு வகையான போட்டிகள் நடத்தபட்டது. பின்னர், பேச்சு போட்டியும், கிராமிய குழு நடன போட்டிகள் நடந்தது.
பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன் கலைப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பராட்டுச் சான்றிகழ்களை வழங்கி, விழா சிறப்புரையாற்றினார். மாவட்ட சைபர் க்ரைம் குற்றவியல் சப் – இன்ஸ்பெக்டர் எஸ். மனோஜ் வாழ்த்துரை வழங்கினார்.
வேப்பூர் ஒன்றிய தேசிய சேவைத் தொண்டர் எம். பிரபாத் நன்றி கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியார்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.