Perambalur: Nine candidates—including those from the TVK and Puthiya Tamilagam—filed their nomination papers yesterday alone!

TVK_Perambalur

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் உள்பட நேற்று 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி, சுயேட்சை உள்பட 4 பேரும், கடந்த 2 ம் தேதி 2 பேரும், கடந்த 4ம் தேதி 8 பேரும் என மொத்தம் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர் சிவக்குமார், மாற்று வேட்பாளராக முத்துமாரி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மேலும், புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் தாமோதரன், சுயேட்சை வேட்பாளர்கள் வெங்கடாஜலம், ஆனந்தஜோதி, ஷியாமளா, சுப்ரமணியன், ராஜா கந்தசாமி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மாற்று வேட்பாளர்கள் மற்றும் 11 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதிய தமிழகம்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!