Perambalur: “No schemes for Tamil Nadu; not even gas cylinders to light the stove”—Condemnation protest held on behalf of the Secular Alliance parties.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கடைவீதியில், மிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என மதசார்ப்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது. பெரம்பலூர் ஒன்றியம் திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ம. ராஜ்குமார் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்க. சித்தார்த்தன் சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர் எசனை ஆறுமுகம் முன்னிலை வகித்தார். திமுகவை சேர்ந்த ஒன்றிய பொருளாளர் கலையரசன், முன்னாள் ஒன்றிய செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாதுரை, முன்னாள் எளம்பலூர் ஊராட்சித் தலைவர் கே.சி.ஆர், குமார், ஒன்றிய பிரதிநிதி மோகன், நெடுவாசல் எஸ்.ஆர்.டி. ராமலிஙகம், எசனை திமுகவை சேர்ந்த மணிவாசகம், ஒப்பந்தரார் கீழக்கரை ரெங்கர், ஒய்வுபெற்ற ஆசிரியர் தங்கராசு, டாக்டர் ஜெயலட்சுமி, முன்னாள் எசனை ஊராட்சித் தலைவர் ராமதேவ் விசிகவை சேர்ந்த காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தேமுதிக மாவட்ட செயலாளர் துரை. சிவா ஐயப்பன், தேமுதிக ஒன்றிய செயலாளர் இளையராஜா, மதசார்ப்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், மதிமுக
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதிதமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும், எசனை, கீழக்கரை, பாப்பாங்கரையை சேர்ந்த ஏராளமான கிராம பெண்கள் மற்றும் திமுகவை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட திராளனோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய துணை செயலாளர் கீழக்கரை ஆதித்தன் நன்றி கூறினார். இதே போல, பெரம்பலூர் நகரம், குரும்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு, குன்னம், கொள்காநத்தம், செட்டிக்குளம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் தலைமையில் நடந்தது.










kaalaimalar2@gmail.com |
9003770497