In Perambalur providing vocational training for women at the village, claiming that fraud of Rs 15 lakh and 75 thousand

பெரம்பலூர் அருகே கிராமத்து பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதாக கூறி பெண்களின் பெயரிலேயே வங்கியில் கடன் பெற்று 15 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்த நபரை கைது செய்யாமல் காவல் துறையினர் அலைகழிப்பதால் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியிடம் பெண்கள் நேரில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த 150 பெண்களிடம், ஆதார் கார்டை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சி அளிப்பதாக அத்தியூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த குரு என்கிற கவியரசன் ( வயது 26) சென்னையில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் கார்ப்பரேசன் வங்கி கிளையில் கணக்கு துவங்கி, அந்த வங்கியில் இருந்து பெண்கள் பெயரில் தலா ரூ.10 ஆயிரத்து 500 கடனாக பெற்றுக் கொண்ட அவர், ஏ.டி.எம் உள்ளிடட பாஸ்வேர்டு, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தராமலேயே வைத்துக் கொண்டு பெண்களுக்கு வந்த பணத்தை தராமல் மோசடி செய்து உள்ளார். இதை அறியாத அப்பாவி கிராமத்து பெண்களுக்கு தவணை செலுத்தக் கோரி வங்கிக் கிளையில் தெரிவித்த போது தான், தங்கள் கணக்கில் கடன் பெற்றிருப்பதும், அதை தராமல் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து கவியரசனிடம் பெண்கள் கேட்ட போது, மிரட்டிதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்கள் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மங்கலமேடு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியதால், இன்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி சோனல் சந்திராவிடம் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காவல் துறையினர் கவியரசனை பிடிக்க தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். பெண்களை ஏமாற்றிய கவியரசன் நாளை வெளிநாடு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் தகவலின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். இது குறித்து மேலும், விசாரணை நடந்து வருகிறது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!