Perambalur: Public Relations Project Camp; Welfare assistance worth Rs. 2.32 crore; Collector provided!
பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட, குரும்பலூரில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
இம்முகாமில் வருவாய் துறையின் சார்பில் இணையவழி பட்டா, வீட்டுமனை பட்டா 189 பயனாளிகளுக்கு ரூ.1,52,00,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து உதவித்தொகை என 6 பயனாளிகளுக்கு ரூ.2,15,000 மதிப்பீட்டிலும், 57 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளையும், 30 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சலவைப்பெட்டி 02 பயனாளிகளுக்கு ரூ.13,104 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை 5 பயனாளிகளுக்கு ரூ.1,70,000 மதிப்பீட்டிலும்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.8,15,429 மதிப்பீட்டிலும், ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 03 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 35,67,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மின் மோட்டார் 02 பயனாளிகளுக்கு ரூ.2,61,000 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.7,13,253 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் காதொலி கருவி 3 பயனாளிகளுக்கு ரூ.8,550 மதிப்பீட்டிலும், மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.20,44,800 மதிப்பீட்டிலும் என மொத்தம் 354 பயனாளிகளுக்கு ரூ.2,32,28,136 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.