Perambalur: Record Break: Collector Sharanya received petitions from about 300 people and listened to their grievances! Public appreciation!!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட இரூரில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஷரண்யா தலைமையில் நடந்தது. அதில் துறை வாரியாக ஒவ்வொரு அலுவலரும், தங்களது துறையில் வழங்கப்படும் சேவைகள், நலத்திட்டங்களை எடுத்துரைத்து எவ்வாறு விண்ணப்பித்து பயனடைவது என்பதையும் தெரிவித்தனர்.

25 பயனாளிகளுக்கு ரூ.37,50,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 57 பயனாளிகளுக்கு ரூ.11,59,750 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண தொகைக்கான காசோலைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.20,320 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.12,00,000 மதிப்பீட்டில் தீருதவித் தொகைகான காசோலைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 182 பயனாளிகளுக்கு ரூ.17,16,600 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரணத் தொகைக்கான ஆணையையும் ,வேளாண்மை துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.5,15,055 மதிப்பீட்டில் குறுவை சாகுபடி மானியத்திற்கான ஆணைகளையும்,, தோட்டக்கலை துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,384 மதிப்பீட்டில் ஆடிப்பட்ட விதை தொகுப்புகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.6,500 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.7,500 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகமும், ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பிலான வங்கி கடனுதவியும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.6,84,000 மதிப்பீட்டில் கறவை மாடு வங்கி கடனுதவிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட காசோலைகளையும், முன்னோடி வங்கி மூலம் 03 பயனாளிகளுக்கு ரூ.46,00,000 என மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூ.1,42,35,109 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷரண்யா வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களிடம் கலெக்டர் ஷரண்யா நேரடையாக ஒவ்வொரு மனுதாரிடம் மனுவை வாங்கியதோடு மட்டுல்லாமல் மனுதாரர்கள் வாய்வழியாக தெரிவித்த கருத்துகளையும் கணிவாக கேட்டறிந்து உரிய துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதனால், மனு கொடுக்கக வந்த மக்கள் வரிசை நீண்டு கொண்டே இருந்த நேரத்தில் பலரும், அவசர அவசரமாக மனுக்களை எழுதி வந்து கொடுத்தனர்.

மேலும், இரூர் கிராம மக்கள் மட்டும் அல்லது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தடப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, பட்டா பிரச்சனை, பொது இடம் ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு, குவாரிகள் குறித்த பிரச்சனை, மகளிர் உரிமைத் தொகை வேண்டுதல், பொது இடத்தை பட்டா வழங்கியதை ரத்து செய்யக் கோருதல் மற்றும், 15 ஆண்டுகளுக்கு மேலாக கலைக் கூத்தாடி மற்றும் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுகக்கு சாதி சான்றுகள் வழங்க மறுப்பது குறித்தும் கலெக்டரிடம் நேரிடையாக ஆதங்கத்தையும், அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பதையும் தெரிவித்தனர். கலெக்டர் ஷரண்யா இவற்றையெல்லாம் பொறுமையுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டே கேட்டு பொதுமக்களுக்கு பதிலளித்து, அரசு விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அங்கு வந்த பொதுமக்கள் கலெக்டர் கற்பகத்திற்கு பிறகு பொதுமக்களிடம் பொறுமையாக மனுக்களை பெற்று தீர்வளிக்கிறார் என பாராட்டி சென்றனர். இரூரில் பொதுமக்களுக்கு இவ்வளவு பிரச்சனை உள்ளதா வியந்தனர். அனைத்துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!