Perambalur: Resolution Passed at VCK Meeting Urging Government Action to Reclaim Lands Encroached Upon by Rover Educational Institution!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பெரம்பலூர் கிழக்கு நகர செயலாளர் சரண்ராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் வக்கீல் அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க.சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு, வெற்றியழகன், இடி முழக்கம், ஜெயவர்த்தனே, சங்கீதா, கேட் மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலு, காட்டு ராஜா, பாக்கியராஜ், ஸ்டாலின் லால், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட செயலாளர்கள் அய்யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீர செங்கோலன் மாநில செயலாளர், முன்னாள் மண்டல செயலாளர் இரா. கிட்டு , மண்டல துணை செயலாளர்கள் மன்னர் மன்னன், லெனின், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தமிழ்மாணிக்கம், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், உதயகுமார், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பால்ராஜ், மு.மா.க மாநில துணைச் செயலாளர் தமிழ் குமரன், தே.ப மாநில துணைச் செயலாளர் பழனிவேல் ராஜன் மாநில வ.அ துணைச் செயலாளர் வெங்கடேசன், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் நடராஜன் , மாநில துணைச் செயலாளர்கள், மணிமாறன், அம்பேத் கோகுல் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பொதுக்குழு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை , தேர்தல் பணிக்குழு நிதிச் செயலாளர் தமிழாதன் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டில் “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்ற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வரலாற்று கனவை சாத்தியமாக்கிய தலைவர் எழுச்சித்தமிழருக்கு நன்றி தெரிவிப்பது, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஆவணபடுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டித்தும்,

பெரம்பலூரில் இயங்கி வரும் ரோவர் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், அண்மைக்காலமாக தனியார் கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது குறித்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும், குன்னத்தில் ஜனநாயக முறையில் போராடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தாக்கிய திமுக சேர்ந்த குண்டர்களை இந்தத் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம்பலூரில் சாதியின் பெயரால் இயங்கிவரும் ஹோட்டல், கடைகளின் பெயர்களை அகற்ற வேண்டும்,

ஜுலை 14 அன்று சென்னையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும், சூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டிற்கு பெரம்பலூரில் இருந்து பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்வது எனவும், மேகேதாது அணையை கட்டும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய செயலாளர்கள் மாஸ் மணி, செந்தில் வளவன், சதீஷ்குமார், வடிவேல் பழனிமுத்து, இராதாகிருஷ்ணன், கவியரசன், வெற்றிவேல், ரவிக்குமார், மாவட்ட அமைப்பாளர்கள் ராமர் முரசொலி பிச்சப்பிள்ளை காமராஜ் தேசிங்குராஜா கோவிந்தராசு விஜயகுமார் சக்தி பாலன் வேலுசாமி செயத்தலி மகாதேவன் துரைமுருகன் வீர கணேசன் சண்முகம் தமிழ்ச்செல்வன் புஷ்பராஜ் கோவிந்தராஜ் சங்கர் தினேஷ்குமார் இளையராஜா ஆதிராஜன் சீமான் அஜித் வினோத் சரவணன் வினோத் பாபு செல்வகுமார்

மாவட்டத் துணை அமைப்பாளர்கள் வேல்முருகன் பார்த்திபன் சிவராமன் தென்றல் சரவணன் ரமேஷ் கங்கைகொண்ட சோழன் செல்வகுமார் செல்வராஜ் மணிகண்டன் செல்வராஜ் பெரியசாமி மாணிக்கம் சேகர் கலைவாணன் சத்தியசீலன் செந்தில்குமார் சகுந்தலா சித்திக் பாட்ஷா அப்துல் அஜீத் ஐயா கண்ணு சுவான்ராஜ் முருகன் வெற்றிமாறன் செல்லதுரை குமார் சக்திவேல் பாலன் ராஜபாண்டியன் சின்னையன் திருஞானம் மாரிமுத்து இம்மானுவேல் மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் சத்யகலா ராசாத்தி வீரலட்சுமி மேரி டயானா திலகவதி சுஜிதா

மகளிர் விடுதலை இயக்க ஒன்றிய செயலாளர்கள் ஜமுனா ராணி வனிதா ரம்யா வான்மதி மணிமேகலை பெரம்பலூர் வேப்பந்தட்டை ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் சின்ன மதியழகன் ரவி வசந்தகுமார் பிச்சபிள்ளை பாலசுப்ரமணியன் வினோத்குமார் செல்வராஜ் தயாளன் கண்ணதாசன் டெல்லி ரமேஷ் ராஜேந்திரன் சக்தி அஜித் சுப்பிரமணியன் பன்னீர் சக்திவேல் தங்கராசு சரவணன் வடிவேல் மும்மூர்த்தி சக்திவேல் ராஜ்குமார் முத்துச்செல்வன் வர்ணன் ஜெகதீசன், பாஸ்கர் பிரகாஷ் ஜெகதீசன் சோழன் மாயக்கண்ணன் பூபாலன் அஜித் ஷிபினாத் பிரவீன் பொன் அனிதா, கனகேஸ்வரி, ஜெயப்பிரியா, ஜெயவர்ஷினி,

பெரம்பலூர் நகர பொறுப்பாளர்கள் ஆழ்வார் தமிழரசன் தீரன் ஜீவா அழகுராஜா பாலமுருகன் சேரன் கார்த்திக், சந்தோஷ் சுமதி சுந்தராம்பாள் மணிமேகலை பவித்ரா பூலாம்பாடி அரும்பாவூர் குரும்பலூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் விஜயவர்மன் சுப்பிரமணி கார்த்திக் கலைச்செல்வன் அருண்குமார் விஜயபாலன் செல்வகுமார் சுந்தரகுமார் சுரேஷ்குமார் சரண்யா சித்ரா தினகரன் கார்த்திக் பழனி முருகன் ரகுவரன் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மேற்கு நகர செயலாளர் தங்க இளவரசன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!