Perambalur: SP issues free passes to police to travel on government buses!

கடந்த 2024 ஆண்டு மே 22 அன்று நாகர்கோவில் இருந்து, தூத்துக்குடி சென்ற புறநகர் அரசு பஸ்சில் டிக்கட் எடுப்பதில் பயணம் செய்த போலீஸ் ஒருவருக்கும் , பஸ் கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. பின்னர். போலீசார் திறமை காட்ட வேண்டும் என்பதற்காக விதிறை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபாராதம் விதிக்க தொடங்கினர். பின்னர், இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு சார்பில், இன்று மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை அரசுப் பஸ்சில் இலவசமாக பயணிக்கும் வகையில் அரசு பஸ் பாஸ்-சை எஸ்.பி ஆதர்ஸ் பசேரா வழங்கினார். இந்த பாஸ் மூலம், பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களில் இலவசமாக அரசு (ஏசி மற்றும் விரைவு பேருந்து தவிர) பேருந்தில் பயணிக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் உடனிருந்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!