Perambalur: Special camp for transgenders; Collector information!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள திருநங்கை / திருநம்பி / இடைப் பாலினர்களின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்று வழங்குவதற்காக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற உள்ளதால் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.