Perambalur: Special camp for unorganized workers!
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் அமைக்கப்பட்டு, 18 நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம். முடக்கு ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவித் தொகைகள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்து கொள்ள, வீட்டுப் பணியாளர்கள், பெண் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுக்காக சிறப்பு முகாம் 13-06-2025 (வெள்ளிக்கிழமை) அன்று தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வருகை தரும் உறுப்பினர்கள் தங்களின் அசல் ஆவனங்களை (குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படம்) எடுத்து வந்து பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலசவமாக பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறும், பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மு. பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.