Perambalur: Special puja at the Shiva temple on the occasion of the last Soma week!
பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீகுரோதி ஆண்டு கடைசி சோமவாரத்தை முன்னிட்டு யாகசாலை ஆரம்பித்து ஈசனை தியானலிங்க வடிவில் வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பி அலங்கரிக்கப்பட்டது. ஈசன் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகத்துடன், மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன், குமார், ரமேஷ், தின வார வழிபாட்டு குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் மற்றும் பிரசாந்த் சிவாச்சாரியார் செய்து வைத்தனர்.