Perambalur: The Collector provided agricultural machinery and welfare assistance

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ. 11.65 லட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

விவசாயிகள் தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுமையான பயிர் வகைகளை உருவாக்குதல், வணிகரீதியாக மற்றும் மாறும் விவசாய முறைகளுக்கேற்ப வலுவான உள்கட்டமைப்பை வடிவமைத்தல், நேரம் மற்றும் செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயம் சிறந்ததாக விளங்கிட விவசாய பணிகளை இயந்திரமயமாக்குதல், விவசாயிகளின் தொழில்நுட்பங்கள் திறனை வளர்த்தல், நன்கு கட்டமைக்கப்பட்ட விற்பனை அமைப்பை நிறுவுதல் மற்றும் வேளாண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என பலன்களை அடைந்து வருகின்றனர்.

அதனடிப்படையில், மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.19,00,184 மதிப்பிலான விசை களை எடுக்கும் கருவிகளை ரூ.11,49,112 அரசு மானியத்திலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் இனத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பீட்டில் மண்புழு உர படுகையினையும் கலெக்டர் வழங்கினார்.

வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சத்யா, மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!