Perambalur The firemen and rescue operation in northeast monsoon during the show’s rehearsal
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு நடவடிக்கை குறித்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) துரை முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தினர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு (ஒரே சமயத்தில் 10 நபர்களை மீட்கும் திறன்கொண்டது), மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி(ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்), மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற), விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங் பேக்) ஆகிய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல்விளக்க நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் என பலர் பார்வையிட்டனர்.