Perambalur: Three people, including a boy, die in separate incidents while fishing.

பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் அகிலேஷ் (14). இவர் கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதியம் அகிலேஷ் தனது நண்பர்களுடன் பிலிமிசை ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றார். மாலை சுமார் 4 மணியளவில் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால்கள் சேற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நீரில் இருந்து வெளியே வர முடியாமல் திணறிய அகிலேஷ், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் -2
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்த சண்முகம் மகன் மணி (41), நேற்றிரவு பைக்கில் பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது டி.களத்தூர் டாஸ்மாக் பிரிவு ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மீது பைக் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்தத பெரம்பலூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம் குளித்தலை தாலுகா கீழ கீரப்பாளையத்தை சேர்ந்த ராஜு மகன் விஜயகுமார் (59) என்பவரிடம், இந்த விபத்து குறித்து பெரம்பலூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் – 3
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரம் பஸ் ஸ்டாப் அருகே பைக்கில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் எதிர் திசையில் வந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் படுகாயம் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் உத்தரப் பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டம், சாபர் கிராமம், கியாமுதீன்பூரை சேர்ந்த ராமசங்கர் அக்ரஹரி மகன் சுபம் அக்ரஹரி (22) என்பது தெரிய வந்தது. மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497