Perambalur: Tobacco Free Day Pledge at Siruvachur Almighty Vidyalaya Public School
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில், மாவட்ட சுகாதார அலுவலர் கீதா தலைமையில் பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார், பள்ளி துணை தலைவர் மோகன சுந்தரம், பள்ளி செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுதி மொழியை மாணவர்கள் ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சுகாதார அலுவலர் கீதா கலந்துகொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி புகையிலை பயன்படுத்தகூடாது என வலியுறுத்தினார். புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் வனிதா, மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட நலக் கல்வியாளர் சீனிவாசன், புகையிலை சமூகப் பணியாளர் தென்றல் குமாரி ஆகியோரும் பேசினர். பின்னர் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளியிலிருந்து 300 அடி தொலைவில் மூன்று புறமும் மஞ்சள் நிற பட்டைக்கோடு வரையப்பட்டு ,புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்றும் TOBACCO Free Zone என்றும் எழுதப்பட்டதை, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா திறந்து வைத்தார். பள்ளி முதல்வர்வர்கள் சாரதா, சந்திரோதயம், துணை முதல்வர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.