Perambalur: Transport and Electricity Minister S.S. Sivasankar laid the foundation stone and inaugurated new projects worth Rs. 15.68 crore!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, புதுக்குறிச்சி, மாக்காய்குளம், ஜமீன்பேரையூர், இலுப்பைக்குடி, சாத்தனூர் குடிக்காடு, குரும்பா பாளையம், கொட்டரை, ஆதனூர், மேலமாத்தூர், மருதையான் கோவில், கீழமாத்தூர், சடைக்கன்பட்டி, அல்லிநகரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், முன்னாள் சேர்மன் முன்னிலையில், சுமார் ரூ.15.69 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.99,80,000 லட்சம் மதிப்பீட்டில் தெரணி முதல் புதுக்குறிச்சி வரை செல்லும் தார் சாலையினை பலப்படுத்தும் பணி, ரூ.86,00,000 லட்சம் மதிப்பீட்டில் மாக்காய்குளம் முதல் இரசுலாபுரம் செல்லும் தார் சாலை பலப்படுத்தும் பணி, ரூ.85,00,000 லட்சம் மதிப்பீட்டில் மாக்காய்குளம் முதல் ஜெமீன் பேரையூர் வரை தார் சாலை பலப்படுத்தும் பணி, ரூ.45,00,000 லட்சம் மதிப்பீட்டில் அருணகிரிமங்கலம் மயானம் முதல் இரசூலாபுரம் செல்லும் தார் சாலை பலம் படுத்தும் பணி, ரூ.1.07 கோடி மதிப்பீட்டில், இலுப்பைக்குடி முதல் கொட்டரை வரை தார் சாலை பலப்படுத்தும் பணி, ரூ.33,50,000 லட்சம் மதிப்பீட்டில் சாத்தனூர் குடிகாடு முதல் நத்தக்காடு செல்லும் தார் சாலை பலப்படுத்தும் பணி, ரூ.65,00,000 லட்சம் மதிப்பீட்டில் குரும்பா பாளையம் முதல் பனங்கூர் வரை செல்லும் தார் சாலையினை பலப்படுத்தும் பணி, ரூ.92,00,000 லட்சம் மதிப்பீட்டில் குரும்பாபாளையம் முதல் கொட்டரை செல்லும் தார் சாலையை பலப்படுத்தும் பணி, ரூ.75,00,000 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் முதல் மூங்கில்பாடி வரை செல்லும் தார் சாலையினை பலப்படுத்தும் பணி, ரூ.61,00,000 லட்சம் மதிப்பீட்டில் மேலமாத்தூர் முதல் வரிசைப்பட்டி வரை செல்லும் தார் சாலை பலப்படுத்தும் பணி, ரூ.60,00,000 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஆதிதிராவிடர் தெருவில் இருந்து வரிசைப்பட்டி வரை செல்லும் மெட்டல் சாலையினை தார் சாலையாக மாற்றும் பணி,
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5,00,000 லட்சம் மதிப்பீட்டில் மேலமாத்தூர் ஊராட்சி ராஜவினக்னேஷ் பள்ளி அருகில் தெற்க்குப்புறம் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ரூ.10,00,000 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஊராட்சி மருதையான் கோவில் பேருந்து நிறுத்தத்தில் கிழக்குபுறம் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ரூ.5,00,000 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் ஊராட்சி சடைக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கிழக்குபுறம் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ரூ.10,00,000 லட்சம் மதிப்பீட்டில் அல்லிநகரம் ஊராட்சி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் வடக்கு மற்றும் மேற்கு புறங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31,40,000 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, என மொத்தம் ரூ.15,68,33,000 மதிப்பீட்டில் 19 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தர்.
பின்னர், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் ஜெமீன் பேரையூர் முதல் அருணகிரிமங்களம் செல்லும் சாலையின் மருதையாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தையும், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.7,85,000 லட்சம் மதிப்பீட்டில் ஆதனூர் ஆதிதிராவிடர் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகக் கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார். ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி, திமுக மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.ஏல்.ஏ வரகூர் ப.துரைசாமி, உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.