Perambalur: VCK Stages Protest, Hoisting Black Flags, to Oppose the Central Government’s Bill on Parliamentary Constituency Delimitation.

விசிக முன்னாள் மண்டல செயலாளர் இரா.கிட்டு இன்று காலை, பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் விசிக கட்சியினருடன் மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் கருப்பு ஏற்றியதுடன், கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர் அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:

“மத்திய அரசு அவசர கதியில் இன்று நாடாளுமன்ற அவையைக் கூட்டி இருக்கிறது. தென்மாநிலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற இந்த நேரத்தில், தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் திசை திருப்புகின்ற அளவில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்கின்ற செயலை முன்வைத்திருக்கிறது. அதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு வேண்டுமென்றே தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக, தென்மாநில மக்கள் பாதிக்கின்ற வகையில் இந்தச் செயலை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதனால் விடுதலைச் சிறுத்தைகளும், இந்தியக் கூட்டணி தலைவர்களும் இதை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்கிற ஒரு செயலிலும் ஈடுபடுத்துகிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் 2023-ஆம் ஆண்டே நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏன் மத்திய அரசு 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதை நடைமுறைப்படுத்தவில்லை? அதுதானே எங்களுக்கு ஒரு சந்தேகம், ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைக்கிறோம். ஆகவே மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். அதை 33-லிருந்து 50-ஆக உயர்த்த வேண்டும்.

2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் மோசடி செய்கின்ற செயலை மத்திய அரசு செய்வதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய ஆலோசனையைக் கேட்டு, பொதுத் தேர்தல் நடைபெற்ற பிறகு மக்களின் கருத்துக்களைக் கேட்டு இதைச் சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே இந்தச் செயலைத் திருட்டுத்தனமாக மக்கள் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற நேரத்தில் மக்களைத் திசைதிருப்புவதற்காக மத்திய அரசு இந்தச் செயலைச் செய்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போராட்டம் எங்கள் தலைவர் சற்று முன்பாகத் தொடர் போராட்டமாக நடைபெறும் என்று எழுச்சித் தமிழர் அறிவித்திருக்கிறார்கள்.

ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் இன்று நாடு தழுவிய அளவில் அவரவர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுகின்ற அந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம். தமிழக முதல்வர் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கின்ற அந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தெரிவித்து எங்களது கண்டனத்தைப் பதிவு செய்கின்றோம் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!