Perarignar Anna Birthday: in Perambalur the cycle race

anna-cycle-raceபெரம்பலூர் : பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டிப் போட்டி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (07.09.16) நடைபெற்றது.

இப்போட்டியானது 13-வயதுக்கு உட்பட்ட பிரிவு, 15-வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் 17-வயதுக்கு உட்பட்ட பிரிவு ஆகிய 3 பிhpவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இம்மூன்று பிரிவுகளிலும் 75 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 125 நபர்கள் கலந்து கொண்டனர்.

13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் கேந்தீரிய வித்யாலயா பள்ளி மாணவர் சி.ஆர்.மிதுன்ராஜ் முதலிடத்தையும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில்; புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஒய்.ஆரோக்கியா எபிசியா டெல்சி முதலிடத்தையும், 15-வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் பாடாலூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.சாந்தகுமார் முதலிடத்தையும், 15-வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சங்கீதா முதலிடத்தையும், 17-வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் கேந்தீரிய வித்யாலயா பள்ளி மாணவி டி.ஆர்.விபின்ராஜ் முதலிடத்தையும், 17-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. குகனேஸ்வரி முதலிடத்தையும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கி.பத்மநாபன் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!