Politicians, officials ignored: in perambalur near at the farmers drain the water content of dredged

vadakkalurபெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை அருகே உள்ள வடக்கலூர் கிராமத்தில் சம்பு, கிணாங்கு, நாணல் என ஒரு கி.மீ. அதிகமாக மண்டிக் கிடந்த வாய்காலை வடக்கலூர், அகரம், கத்தாழை மேடு மற்றும் பழைய அரசமங்கலம் ஆகிய நான்கு கிராமத்தைச் சேர்ந்த வடக்கலூர், அக்ரகாரம் ஏரிப்பாசன விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏக்கருக்கு 150 ருபாய் வீதம் வசூலித்து கடந்த 3 நாட்களாக தூர் வாரிவிட்டனர். இதனால் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையில் அனைத்து விவசாயிகளுக்கு தண்ணீர் தடையின்றி தண்ணீர் வீணாகாமல், நேரடியாக வயலுக்கு கிடைக்கும்.

இப்பணி கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு தொடங்கி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது. வடகிழக்கு பருவ மழைக்கு முன் இதை சாத்தியமாக்கினர் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கு முன்பாக பல முறை மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட பல துறையினருக்கும் பல முறையினருக்கும் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிம்பளம் பார்ப்பததிலேயே குறியாக இருந்தனர். நாளேடுகளிலும், இது குறித்து செய்திகள் வெளியிட்டு இருந்தது. அரசியல் கட்சியினர் விவசாயிகளின் முக்கிய பிரச்சனையை அதிகாரிகள் போலவே கண்டு கொள்ளவில்லை.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!