poolampadi jallikattu near in perambalur: Bulls 348 attended.
பெரம்பலூர் அருகே உள்ள பூலாம்பாடி பேரூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 348 க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்ட்ட காளைகள் கலந்து கொண்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 128 பேர்கள் கொண்ட இரண்டு அணியாக கலந்து கொண்டனர்.
அரசு அனுமதியுடன் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டிற்கு வெளியூரில் இருந்த வருகை புரிந்த 256 மாடு பிடி வீரர்கள் மற்றும் உறவினர்களுக்கு வடை, பாயசம் மற்றும் கறி விருந்தும் கொடுத்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விளையாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்ட்டனர்.
பூலாம்பாடி அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் வாடி வாசல் அமைக்கப்பட்டு காலை 9 மணி முதலலே காளைகள் ஜல்லிக்கட்டு திடலுக்கு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அங்கு திரளாக திரண்டு இருந்த மாடுபிடிவீரர்கள் காளை அடக்கினர்.
சில காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு கையில் சிக்காமலேயே போக்கு காட்டி மிரட்டி விட்டு சென்றது. ஒரு சில காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டிதிலும், தூக்கி வீசியதிலும் சிறிய அளவில் காயமடைந்தனர்.
தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். காளைகள் அடக்கியவர்களுக்கு, காளைகளுக்கும் அண்டா, குண்டா, குடம், வெள்ளி பொருட்கள், கட்டில், மெத்தை, பிரோ, உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்ட்டது. இந்த ஜல்லிக்கட்டை காண கள்ளப்பட்டி, கடம்பூர், அரும்பாவூர், தழுதாழை, தொண்டைமாந்துறை, கீரைவாடி, பெரியம்மாபாளையம், உடும்பியம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
ஜல்லக்கட்டு நடந்ததால் பூலாம்பாடி பேரூர் இன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களும் அமைத்து நீர் மோர் பானகங்களும் வழங்கினர்.
காவல் துறை, வருவாய்துறை, கால்நடைத்துறையினர் தொடர்ந்து அயராமல் பாதுகாப்பு பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.












kaalaimalar2@gmail.com |
9003770497