Private sector employment camp in Perambalur – Ariyalur district; Collector information!
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தம் செய்யும் நோக்கோடு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரம்பலூர், அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.06.2025 (சனிக்கிழமை) அன்று மேலமாத்தூர், இராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் காலை 08.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூர் தனியார்துறை நிறுவனங்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 13.06.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் (Pan Card, GST Certificate, Incorporation certificate, Udyog Aadhar) நேரில் வந்து தங்களது நிறுவனத்தை private job portal-ல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு E-Mail-deoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியலோ அல்லது 94990 55913 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.