Provide periodic wage, set up Directorate for nurses resolution passed Nurses Meeting

தஞ்சாவூர் மருத்துவ தேர்வு வாரிய செவிலியர்களின் மாநில பொதுக்குழு கூட்டம் ராஜன் தலைமையில் நடைபெற்றது. எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு பணியில் சேர்ந்த நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்கிடவும் உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி சமவேலைக்கு சமஊதியம் வழங்கிடவும், செவிலியர்களுக்கு தனியாக செவிலியர் இயக்குநரகம் அமைத்திடவும், பணிபுரியும் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை பணியிடத்தில் பாதுகாப்பற்ற சூழல் அச்சுறுத்தல் போன்றவற்றை கண்காணிக்க பிரத்யோக புகார் மையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவராக கோபிநாதன் மாநில பொதுச்செயலாளராக சுபின் துணை செயலாளர்களாக விஜயகுமார் விக்னேசு மாநிலப் பொருளாராக பரிமளா மாநில துணைத் தலைவர்களாக கலைச்செல்வி சசிகலா லலிதா தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதிலிருந்தும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497