பெரம்பலூர் பகுதிகளில் மழை !
பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில் இன்று மாலை பெய்த மழையால் சற்று நிம்மதியடைந்தனர். செங்குணம், பிரிவு ரோடு மற்றும் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதிகளில் அத்திகட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது.