rajavignesh school student suicide by jumping on the roof of the broken hearted!

rajavignesh-school-melamathur-perambalur பெரம்பலூர் மாவட்டம், குன்னம், மேலமாத்தூர் கிராமத்தில் ராஜவிக்னேஷ் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் சதீஷ்(17), இன்று காலை பள்ளியின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அளிக்கப்பட்டுள்ள 5 தொடர் விடுமுறையில் சிறப்பு வகுப்பு உள்ளது என பள்ளியிலேயே தங்க வைத்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!