#Red Cross #AIDS #Perambalur News
பெரம்பலூர் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது. அதனை தடுக்கும் முறைகள் பற்றி எடுத்து கூறப்பட்டது.
முடிவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இரண்டு மாணவிகளுக்கு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பட்டு மையம் சார்பில் தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.