Requesting the Government to lift Vinayagar Chaturthi festive contracts: KMDK ER.Eswaran
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகளை சாலை ஓரங்களில் வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
பெருவாரியான இந்திய மக்களின் வழிபாட்டு நம்பிக்கை இதன் மூலம் சிலை செய்கின்ற தொழிலாளர்களுடைய வாழ்வும் மேம்படுகிறது. அதிகமாக இந்த வழிபாடுகளை நடத்துவது இளைஞர்களாக இருக்கிறார்கள்.
இளம் வயதில் ஒரு மாத காலம் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் சுய ஒழுக்கம் மேம்படுகிறது. இப்படிப்பட்ட பல நல்ல விசயங்களை விநாயகர் வழிபாடு இந்திய இளைஞர்களுக்கு கற்று கொடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு திடீரென்று 10 நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்த முடியாத கட்டுபாடுகளை விதித்து தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டை தடை செய்கின்ற அளவிற்கு முயற்சி எடுத்திருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் விநாயகர் ஊர்வலம் மதநல்லிணக்கத்தோடு அமைதியாக நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக அரசின் இந்த திடீர் முடிவு வியப்பை தான் கொடுக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகின்ற கேரள மாநிலத்தில் கூட இதை போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்பது அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
ஏதோ ஒரு அமைப்போ, இயக்கமோ மட்டும் கொண்டாடுவது அல்ல. பொதுமக்கள் சார்பாக கவர்னர், முதலமைச்சர் போன்றவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டும் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு இதை புரிந்து கொண்டு விநாயகர் சிலை வழிபாட்டிற்கு விதித்திருக்கின்ற கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.