Road blockade for Delta Districts condemning did not come Cauvery water to irrigation areas: PR Pandian
திருவாரூர்: மன்னார்குடியில் வடவாறு விரிவாக்க கால்வாய் விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் பேரையூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது..
30 ஆயிரம் கன அடி காவிரி ஆறு வழியாக பாசனத்திற்கு கொண்டு செல்கிறோம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது ஆனால் இதுவரை பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை . விவசாயிகள் நாற்று நடும் பணியை தொடங்க முடியவில்லை நேரடி விதைப்பு செய்தவர்கள் தண்ணீர் வைத்து பயிரை காப்பாற்ற முடியவில்லை விவசாயிகள் தண்ணீர் கடலில் கலப்பதை பார்த்து பரிதவிக்கிறார்கள்.
இதற்கு முற்றிலும் பொதுப்பணித் துறை செயலிழந்துவிட்டது தூர்வாருவதற்கு நான்காண்டுகள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி தூர்வார வில்லை . இதில் ஊழல் முறைகேடு செய்து விட்டார்கள் ஆறுகளில் நீரோட்டம் ஒழுங்கு படுத்த வில்லை மணல்கள் சூறையாடப்பட்டு விட்டது மணல் கொள்ளைக்காக கரைகள் உடைக்கப்பட்டு விட்டது . பாசன ஆறுகள் பள்ளமாகவும் விளைநிலங்கள் மேடாகவும் மாறிவிட்டது பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல மறுக்கிறது எனவே இதற்கு பொதுப்பணித் துறை முழு பொருப்பேற்க வேண்டும்.
பாசன தண்ணீரை முறையாக கொண்டு செல்லாமல் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதனை கண்டித்து அணைத்து கிராமங்களுக்கும் உடனடியாக பாசன தண்ணீரை கொண்டு சென்;று விளைநிளங்கள் ää ஆறுகள் ää ஏரிகள் ää குளங்கள் முழுமையாக தண்ணீர் நிரப்ப வேண்டும் முதல்வர் பாசன பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 25ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் விவசாயிகள் அரசியல் கட்சிகள் இதில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ் தலைவர் மேலவாசல் கருணாநிதி, செயலாளர் நெடுவை சங்கர், பொருளாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்