Rover wanted to study together at the school, it did not happen: Businessman nostalgia!
ரோவர் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரோவர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அல்லிராணி முன்னிலை வகித்தார். முதல்வர் கணேஷ்பாபு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்டரி லயன்ஸ் க்ளப் தலைவரும், தொழிலபதிபருமான மு.இமயவரம்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது : நான் 6ம் வகுப்பு படிக்கும் போது தான் ரோவர் பள்ளியில் 6 ம் வகுப்பு துவக்கப்பட்டது. அப்போது நான் பெரம்பலூர் அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். என் நண்பர்கள் எல்லாம் அப்போது ரோவர் பள்ளியில் நானும் படிக்க ஆசைப்பட்டேன் அது முடியாமல் போகிவிட்டது என்றும் பேசினார். அவரது பேச்சை கேட்க விரும்புவர்கள் ஒலிவிடிவில் கேட்டு மகிழலாம்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை அனைத்துறை தலைவர்கள், துறைப் பேராசிரியர்கள், அலுவலுர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் புகழேந்தி, வெற்றிவேல், அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர்கள் திராளாக கலந்து கொண்டனர்.