Sanitation workers seeking to deliver a petition to the collector of the panchayat kurumbalur full payment
குரும்பலூர் பேரூராட்சியில் முழுசம்பளத்தை வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.271 வீதம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு, 266 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொழிலாளர் சட்டப்படி கூடுதலாக ஞாயிறு அன்று பார்க்கும் பணிக்கு முழு நேர சம்பளம் வழங்காமல், அரை நேரம் சம்பளம் புதிதாக பணிக்கு வந்துள்ள செயல் அலுவலர் வழங்குவதாகவும், இதனால், பணி செய்தும் மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியம் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருவதாகவும், அதனை பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுலக குறைத்தீர் கூட்டத்தில் மனுக் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா.