பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான குழுப்போட்டிகளும், தடகள போட்டிகளும் இன்று(14.10.16) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா தொடங்கி வைத்தார்.
இன்று நடைபெற்ற புதிய விளையாட்டுகள் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் கீழ் டென்னிகாய்ட், கேரம், கையுந்து பந்து, சாலையோர மிதி வண்டி போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மிதிவண்டிப்போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் உள்ள விளையாட்டு விடுதியில் இருந்து தொடங்கி விளாமுத்தூர் சாலை வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் முடிவடைந்தது. இன்றைய போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 18 பேர் வீதம் 4 பிரிவுகளில் 72பேர் வெற்றிபெற்றனர்.
மேலும், முதன்மை விளையாட்டுப்போட்டி பிரிவில் 18.10.2016 அன்று கால்பந்து, பூபந்து, கையுந்துபந்து, கோகோ, கபாடி, மேசைபந்து உள்ளிட்ட போட்டிகளும், 25.10.2016 அன்று ஹாக்கி, டென்னிஸ், எறிபந்து, கைபந்து, கூடைபந்து, இறகுபந்து, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபட உள்ளது.
20.10.2016 மற்றும் 21.10.2016 ஆகிய தினங்களில் 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர; மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் 100மீ, 200மீ 400மீ, 800மீ தடகளப்போட்டிகளும், தடைதாண்டி ஒடுதல் நீளம் தாண்டுதல், உயரம் தண்டுதல் குண்டு எறிதல், வட்டு எறிதல் 4 x 100 மீ தொடர் ஓட்டமும், மாணவ,மாணவியருக்கான தடகளப் போட்டிகள் பிரிவில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 3000மீ (இருபாலருக்கும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது) 100மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதவல், கோலூண்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் 4 x 100மீ தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற 21 ஆம் தேதி அன்று முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது என தெரிவிக்ப்பட்டுள்ளது.