sickle wife hit her husband arrested near perambalur

husbandபெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி(48), மஹாராணி(35) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது,
இதில், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முத்துசாமி, இது தொடர்பாக அவரது மனைவி மஹாராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆக. 26 அன்று கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முத்துசாமி அரிவாளால் தாக்கியதில் மஹாராணிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது, இதனையடுத்து திருச்சி மாவட்டம், துறையூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த மஹாராணி குன்னம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், மஹாராணி கணவர் முத்துசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!