South indian-sized Junior Athletics Championships winning players met with the civil servent-greeting
தென்னிந்திய அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் ஓட்டப் போட்டி மற்றும் ஹெப்டாத்லன் போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீராங்கனைகள் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமாரை இன்று அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
28-வது தென்னிந்திய அளவிலான இளையோர் தடகள போட்டிகள் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் 04.10.2016 தேதி முதல் 05.10.2016 தேதி வரை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு 18-வயதுக்குட்பட்ட பிரிவில் மிஸ்பாஅனிதா ஹெப்டாத்லன் போட்டியில் தங்கப் பதக்கமும், 14-வயதுக்குட்பட்ட பிரிவில் ஆரோக்கியஎபெசியா டெல்சி, 600மீ ஒட்டப்போட்டியில் வெண்கல பதக்கமும், பெற்று தமிழகத்திற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் (குடிமைப் பணியாளர்) க.நந்தகுமார் தென்னிந்திய அளவிலான இளையோர் தடகள போட்டிகள் வெற்றிப் பெற்ற வீராங்கனைகளை பாராட்டி மேன்மேலும் பல வெற்றிகளை பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க.கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.